நடிகர் சூர்யா மகளின் 10-ம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா?

நடிகர் சூர்யா மகளின் 10-ம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா?
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும்  தேவ் என்ற மகனும் உள்ளனர்.

தியா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட, தேவ் படிப்பை கராத்தேயில் கலக்கி வருகிறார்.  இந்நிலையில் தியா தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் சூர்யாவின் மகள் தியா தமிழில் 95, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 98, மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com