ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கேரள பெண் மரணம்!

ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கேரள பெண் மரணம்!

கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டன், சிக்கன் உணவுகளை வெளியில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு காசர்கோடில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி தேவந்தா உயிரிழந்தார். சமீபத்தில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் ராஷ்மி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோட்டயத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ராஷ்மி கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஒரு உணவகத்தில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடரபாக போலீஸாரும், உணவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தியபோது ராஷ்மியைப் போலவே மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. லைசென்சும் ரத்துச் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து உணவுத் துறை அதிகாரிகள் கோட்டயத்தில் உள்ள உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காசர்கோடு அருகே பெரும்பாலா என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற 20 வயது பெண் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உள்ளூர் ஹோட்டலில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும் இது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com