ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காலணியைத் தொலைத்த சிறுமி.. தோளில் சுமந்து நடந்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சி என்.பி-யான ராகுல் காந்தி  தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடை பயணம் நடத்தி வருகிறார். இதில் காலணியை தொலைத்த ஒரு  சிறுமியை, ராகுல் காந்தி தன் தோளில்  தூக்கி சுமந்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பித்த இந்த நடைபயணம்,  தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என 9 மாநிலங்கள், 46 மாவட்டங்கள் என கிட்டத்தட்ட 3,000 கி.மீ நீண்டது. இந்த பயணத்தில், 9 மாநிலங்களைக் கடந்து இப்போது டெல்லியைச் சென்றடைந்து ராகுல் காந்தி நடைபயணம் பேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் தற்போது டெல்லியில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை யாத்திரையில் பங்கேற்ற சிறுமி ஒருவர்,  கூட்ட நெரிசலில் தனது காலணியை தொலைத்தார். அவர் மேற்கொண்டு நடக்க இயலாமல் தவிப்பதை அறிந்த ராகுல் காந்தி, அச்சிறுமியிடம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அச்சிறுமியச்ராகுல் காந்தி தனது தோளில் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, அங்கிருந்த அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com