பைக் சாகஸத்தில் ஈடுபட்ட மும்பை இளைஞர் கைது!

பைக் சாகஸத்தில் ஈடுபட்ட மும்பை இளைஞர் கைது!

இரு சக்கர வாகனத்தில் இரு பெண்களை உட்கார வைத்து பைக் சாகஸம் அதாவது பைக் ஸ்டண்ட் செய்த நபரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் ஃபயாஸ் காத்ரி, 24 வயது இளைஞரான காத்ரி, சகி நாகாவில் உள்ளூர் BKC காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பைக்கின் பதிவு எண்ணின் அடிப்படையில், போலீஸ் இரண்டு பெண்களுடன் குழுவாக பைக் சாகஸத்தில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளியை அடையாளம் கண்டு, அவரை அவரது ஆன்டோப் ஹில் இல்லத்தில் இருந்து கைது செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்ரியின் பைக் சாகஸ வீடியோவில், ஹெல்மெட் அணியாத காத்ரி, ஒரு இளம்பெண் தனக்கு முன்னால் அமர்ந்திருக்க, மற்றொரு இளம்பெண் பில்லியனில் அமர்ந்திருக்க, பைக்கை இயக்கி அதில் வீலிங் செய்வதைக் காண முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட யாரோ சில புண்ணியவான்கள் அந்த வீடியோவில், மும்பை போலீசாரை டேக் செய்திருக்கிறார்கள். அதன் பின்னரே மும்பை போலீஸார் அந்த வீடியோவைக் காண நேர்ந்திருக்கிறது.

அப்போது அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த மும்பை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அந்தத் தேடலில் தெரிய வந்தது குற்றம் சாட்டப்பட்ட காத்ரிக்கு எதிராக நகரத்துக்கு வெளியே இதே போன்று கடந்த காலங்களில் இரண்டு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையைப் போலீசார் கண்டறிந்தனர்.

காத்ரிக்கு போலீஸ் தன்னைத் தேடுவது குறித்துத் தெரிந்ததும், தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். இறுதியில், தொழில்நுட்ப நுண்ணறிவின் அடிப்படையில், அவர் சகி நாகா பகுதியில் இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com