ஆன்லைன் விளையாட்டு
ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டுக்கு விரைவில் புது சட்டம்; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைவில் புதிய சட்டம் கொண்டு  வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டை பலரும்  விரும்பி விளையாடி வருகின்றனர். இந்த சூதாட்ட விளையாட்டுகளில் பலரும் தங்கள் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பேசியதாவது:

ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தற்கொலைகள் குறித்து மாநில அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர்.

இதுபோன்ற விளையாட்டுகள் சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது. அனைத்து தரப்பிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம். எனவே ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப மசோதாவை பொருத்தமட்டில், இந்தியாவின் டிஜிட்டல் மசோதா உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com