அஷோக் கெலாட்டை முந்தும் சச்சின் பைலட்

அஷோக் கெலாட்டை முந்தும் சச்சின் பைலட்

ராகுல் காந்தியின் “பாரத் ஜடோ” யாத்திரையால் ராகுலுக்கோ, காங்கிரசுக்கோ பலன் இருக்கிறதோ இல்லையோ, ராஜஸ்தானின் முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கு எதிர் கோஷ்டியான சச்சின் பைலட்டுக்கு நல்ல லாபம்!

ராகுல் காந்தி, தன் பாத யாத்திரையில் ராஜஸ்தானுக்குள்ளே நுழையும் முன்பாக, ஒரு சிறு வீடியோவை எடுத்து, தனது சமூக ஊடகங்கள் மூலமாக வெளியிட்டார் சச்சின்!

அதை அவர், யாத்திரை டீ ஷர்ட், டிராக்ஸ் அணிந்து கொண்டு, கையில் காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் காட்சி அளிக்கிறார். கொடியை அசைத்தபடி, “ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரையில் ராஜஸ்தான் முழுவதும் கலந்துகொள்கிறது! நீங்களும் கலந்துகொள்கிறீர்கள் இல்லையா?” என்று சச்சின் கேட்பது போன்ற வீடியோ அது.

அந்த முப்பது விநாடி வீடியோவை, சச்சின் பைலட் தனது டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாவற்றிலும் உலவ விட்டார். அது வைரலாகிவிட்டது.

ஒரு கணக்குப்படி, டுவிட்டரில் அந்த வீடியோவை ஐந்து லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் 70 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரம் பேர் பார்த்துவிட்டார்கள்!

இந்த வியூகத்தின் மூலமாக சச்சின் தன்னை ராஜஸ்தானின் யூத் ஐகானாகவும், அஷோக் கெலாட்டுடனான மோதலில் தன் கை ஓங்கி இருப்பதாகவும் காட்டிக் கொள்ளும் முயற்சி என்று விமர்சிக்கிறது அஷோக் கெலாட் தரப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com