கங்கா சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா?

கங்கா சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா?

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியைத் தேர்ந்தெடுத்தபோது, “காங்கா மாதா என்னை அழைக்கிறார்” என்று கூறினார்.

2024ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது.  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு   “எதிர்க்கட்சிகள் சார்பில் மோடிக்கு மாற்றாக, பிரதமர் வேட்பாளராக தன்னை நிறுத்துவார்கள்” என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆகவே, ஐக்கிய ஜனதாதளக் கட்சியினர் இப்போதெல்லாம் நிதிஷ் குமார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின்போது, “ஹமாரா பிரதான் மந்திரி கைசே ஹோ, நிதிஷ் ஜி கே ஜைசே ஹோ”  என்று  கோஷம் எழுப்புகிறார்கள்.  அதாவது, “இந்தியப் பிரதமர் எப்படி இருக்க வேண்டும்? நிதிஷ்குமார் போல இருக்க வேண்டும்!” என்று  இதற்கு அர்த்தம்.

அதன் காரணமாக, இப்போது, மோடி மாதிரியே கங்கா சென்டிமென்ட்டை நிதிஷ் குமாரும் கையில் எடுத்திருக்கிறார்.  கடந்த மாதம் அவர்  ஒரு  குடிநீர் திட்டத்தைத் துவக்கி வைத்தார். அந்தத்  திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் : “ஒவ்வொரு வீட்டிலும் கங்கை நீர்!” என்பதுதான்.

“கங்கை சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆவதற்கு முன்னால், எதிர்க்கட்சிகள் ஒரு அணியாகத் திரள்வார்களா?  என்று பார்க்கலாம்! அப்படித் திரண்டாலும், நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வார்களா? என்று பார்க்கலாம்! “  என்று கமெண்ட் அடிக்கிறார்கள் உள்ளூர் மீடியாவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com