சென்னையில் நடைபெற இருக்கும் போர் விமான சாகசக் கண்காட்சி!

Indian Fighter aircraft exhibition in Chennai
Indian Fighter aircraft exhibition
Published on

இந்திய விமானப்படை தனது 92வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான முறையில் போர் விமானக் கண்காட்சியை நடத்த இருக்கிறது. வரவிருக்கும் அக்டோபர் 6 ம் தேதி காலை11 மணி முதல் போர் விமான கண்காட்சி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டு பாரதிய வாயு சேனா என்ற பெயரில் போர் விமான சாகசக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டங்கள் ஆற்றல், சக்தி மற்றும் சார்பின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 72 விமானங்கள் பல வித சாகசங்கள் செய்ய உள்ளது. ஆகாஷ் கங்கா என்ற இந்திய விமானப்படையின் (IAF) ஸ்கை டைவிங் குழு மிக உயரத்தில் இருந்து சிலிர்க்க வைக்கும் பல்வேறு சாகசங்களை செய்ய உள்ளது. அதை தொடர்ந்து சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவும் விமானங்களில் பலவித சாகசங்கள் செய்ய உள்ளார்கள். இது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் மட்டுமே இதற்கு முன் பார்த்து இருப்போம். நேரில் பார்ப்பதற்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களை சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே குழு ஹெலிகாப்டர் சாகசங்களை செய்ய உள்ளனர். இந்த புகழ்பெற்ற அணிகளுடன், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகுரக போர் விமானம் தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் பாரம்பரிய விமானங்களான டகோட்டா மற்றும் ஹார்வர்டு ஆகியவை அணிவகுப்பு மற்றும் வான்வழி சாகசத்தில் பங்கேற்கும்.

இது மட்டுமில்லாமல் இந்தியாவின் முதன்மையான போர் விமானங்களான ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ மற்றும் மிகோயான் வரை பங்கேற்கிறது. புதிய விமானங்கள் மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 3 பேர் பலி!
Indian Fighter aircraft exhibition in Chennai

இந்திய விமானப்படை தின விழா தென்னிந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. முதலில் டெல்லியில் தான் விமான சாகசக் கண்காட்சி நடைபெற்றது. பின்னர் சண்டிகர் மற்றும் பிரக்யாராஜில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிரக்யாராஜில் நடைபெற்ற போர் விமான சாகச கண்காட்சி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்த ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற அதிக பார்வையாளர்களை கவரும் வகையில் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைக்கும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சென்னையில் போர் விமான சாகசங்களை கண்டுகளிக்க 15 லட்சம் வரை வரக்கூடும் என்று விமானப் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com