துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர்

துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர்

நில­ந­டுக்­கத்­தால் பெரும் சீர­ழி­வைச் சந்­தித்­துள்ள துருக்­கி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மருத்­து­வச் சேவை அளித்து வரும் இந்­திய ராணு­வத்­தி­ன­ரைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

ராணுவ மருத்­து­வர் கர்­னல் யது­வீர் சிங் தலை­மை­யில் 14 மருத்­து­வர்­கள் , செவிலியர்கள் உள்­ளிட்ட 99 பேர் கொண்ட மருத்துவக் குழு துருக்கி சென்­றுள்­ளது. அங்கு காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு இக்­குழு­வி­னர் சிகிச்சை அளிக்­கின்­ற­னர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. தற்போது வரை பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ மேஜர் பீனா திவாரி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கக்த்தில் பகிர்ந்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆப்ரேஷன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துருக்கி சென்றுள்ள இந்திய மீட்பு படையில் உள்ள பெண் மருத்துவ அதிகாரி மேஜர் பீனா திவாரி. இவர் துருக்கியில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ”இது இந்தியாவின் சர்வதேச புகைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய ராணுவம் உலகிலேயே மிகப் பெரிய ராணுவம் என்றும் மீட்பு பணியில் அவர்களுக்கு மிகப் பெரிய அனுபவம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com