இன்று மாலை இந்தியா வருகிறார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா..!

shubhanshu shukla
shubhanshu shukla
Published on

இந்நிலையில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று மாலை இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்தியாவிற்கு வரும் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் கடந்த ஜூன் 25-ந்தேதி விண்வெளி சென்றனர்.அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றதுடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் கால் பதிக்கும் 2-வது இந்தியர் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் போது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், பிரதமர் மோடி, ‘வெப்கேஸ்ட்’ நேரலை மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையும் படியுங்கள்:
இந்த 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை..!
shubhanshu shukla

விண்வெளியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சுபான்ஷு, "இங்கு எடை இல்லாத நிலையில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. விண்வெளியில் நடப்பதும், சாப்பிடுவதும் ஒரு குழந்தையைப் போல புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வருகிறேன்" என்று கூறினார். "நாங்கள் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறோம். இதன் காரணமாக ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறோம். பூமிக்கு மேலே இருந்து பார்க்கும்போது, எந்தவித எல்லைகளும் இல்லாமல் பூமி ஒரே கோளமாகத் தெரிகிறது. இந்தியா வரைபடத்தில் இருப்பதை விட மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது" என்று பெருமையுடன் கூறினார்.

மேலும், "ஒற்றுமையின் உணர்வை உண்மையிலேயே உணர முடிந்தது. இங்கிருந்து பார்க்கும்போது ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் என தோன்றியது. எந்த எல்லைகளும் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த முழு பூமியும் நமது வீடு போலவும், நாம் அனைவரும் அதன் குடிமக்கள் போலவும் உணர்ந்தேன்," என்று கூறினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பது, 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது. நீங்கள் இந்தியாவில் இருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்த பயணம் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு முதல் படியாக அமையும். வளர்ந்த இந்தியாவுக்கு உத்வேகத்தை தரும்.விரைவில் நமது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். மேலும் ஒரு இந்திய விண்வெளி வீரர் சந்திரனில் தரையிறங்குவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் அனுபவங்கள் இந்த எதிர்கால பயணங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். இன்று உங்களுடன் பேசுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது," என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று மாலை இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்தியாவிற்கு வரும் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com