#BREAKING : பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்தார்..!

Leander Paes JOINS BJP
Leander Paes JOINS BJP image source: twitter
Updated on

90களில் இந்தியாவின் அசைக்க முடியாத டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் லியாண்டர் பயஸ். இந்தியாவின் சார்பாக பல சர்வதேச போட்டியில் விளையாடி பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவர். இது மட்டுமல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற டென்னிஸ் வீரராகவும் உள்ளார். தற்போது மேற்கு வங்கத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் லியாண்டர் பயஸ் இன்று(மார்ச் 31) அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ முன்னிலையில் கட்சியில் லியாண்டர் பயஸ் இணைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் கடந்த 2021 மே.வங்க சட்டமன்ற தேர்தலின் போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது அதிருப்தி காரணமாக 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். 

தற்போது மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட லியாண்டர் பயஸ் திட்டமிட்டுள்ளார்!

இதையும் படியுங்கள்:
தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் பிரச்சாரத்தை தொடங்கிய சௌமியா அன்புமணி..!
Leander Paes JOINS BJP
logo
Kalki Online
kalkionline.com