தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் பிரச்சாரத்தை தொடங்கிய சௌமியா அன்புமணி..!

sowmiya anbumani
sowmiya anbumani
Updated on

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகிக்கும் பாமக சார்பில் , அதன் தலைவர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி, தர்மபுரி தொகுதியில் போட்டியிட உள்ளார். இன்று (மார்ச் 31) மதியம் தனது தொகுதியில் மாம்பழ சின்னத்துடன் தீவிர பிரச்சாரத்தை சௌமியா அன்புமணி தொடங்கியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட இதே தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிட்டார். இவரது கணவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார்.

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல தொகுதிகளில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறது.

இந்த பகுதிகளை பாமக தனது கோட்டையாக கருதுகிறது. சௌமியா அன்புமணிக்கு ஏற்கனவே உள்ளூர் பகுதியில் நன்கு அறிமுகம் உள்ளதால் , பல்வேறு பகுதிகளில் அவர் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

தர்மபுரி தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு பேசி வருகிறார். தர்மபுரி மட்டுமல்லாத அருகில் உள்ள பொன்னாகரம் மற்றும் அப்பா அம்மா போட்டியிடும் சில தொகுதிகளிலும் சௌமிய அன்புமணி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: மக்களே உஷார்..! சர்ச்சைக்குரிய SMS அனுப்பினால் சிறை நிச்சயம் : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
sowmiya anbumani
logo
Kalki Online
kalkionline.com