தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 763 சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே
Published on

தீபாவளி மற்றும் சாட் பண்டிகையை முன்னிட்டு , குடிமக்கள் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. பண்டிகைகளின் போது பயணிகள் அளவுக்கு அதிகமாக பயணம் மேற்கொள்ள தேவை இருப்பதால் , பல்வேறு மண்டலங்களில் இருந்து 763 தீபாவளி மற்றும் சாட் பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மூலம் 10,782 முறை பயணங்களை மேற்கொள்ள உள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் சில ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன, மற்ற புதிய பயண ரயில்கள் தேவை அதிகரிப்பதால் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் இயக்கப்படுகின்றன. அதிக நெரிசல் கொண்ட பாதைகளில் ரயில் பாதைகளின் திறனை ஏற்கனவே ரயில்வே அமைச்சகம் விரிவுபடுத்தி உள்ளது. இதனால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது எளிமையாக இருப்பதாக  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (அக்.11) தெரிவித்தார்.

தீபாவளி மற்றும் சாட் பூஜைக்காக அதிக அளவு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிறைய ரயில்வே பாதைகள் உருவாக்கப்பட்டதாலும் , பாதைகள் மேம்படுத்தப்பட்டதாலும் சாதனை அளவில் ஏராளமான ரயில்கள் விடுவது சாத்தியமானது. மத்திய அமைச்சரவை தொடர்ந்து புதிய தண்டவாளங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. 

சுமார் 10,700 சிறப்பு ரயில் பயண சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 150 ரயில்கள், அதாவது சுமார்  தோராயமாக 2000 பயணங்கள் கூடுதலாக சேர்கின்றன. இவை முன்பதிவு செய்யப்படாதவையாக உள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு சிறப்பு ரயில் பயண சேவைகளின் மொத்த எண்ணிக்கை 12,000 க்கும் அதிகமாக உள்ளது என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.

ரயில்வே அமைச்சகத்திடம் உள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, வடக்கு ரயில்வேயில் 52 ரயில்களின் மூலம் அதிகபட்சமாக 1925 பயணங்கள் சேவையாக கிடைக்கும். கிழக்கு மத்திய ரயில்வேயில் 74 ரயில்கள் மூலம் 1324 பயணங்களைக் மேற்கொள்கிறது. இந்த இரண்டு மண்டலங்களும் டெல்லி, உ.பி மற்றும் பீகார் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது, அங்கு பண்டிகைகளின் போது பயணிகள் போக்குவரத்து தேவைகள் அதிகமாக இருக்கும்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே  1299 பயணங்களுக்கு 68 ரயில்களை அனுப்பியுள்ளது. தெற்கு மத்திய ரயில்வே 1015 பயணங்களையும்  வடமேற்கு ரயில்வே 942 பயணங்களையும் மேற்கு ரயில்வே 1198 பயணங்களுடன் சேவைகளை தொடரும்.மொத்தமாக 900 க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் வகையில் கிழக்கு ரயில்வே , தென்கிழக்கு ரயில்வே மற்றும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலங்களும் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளன. 

பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் பிற மாநிலங்களை நோக்கிய பண்டிகை கூட்ட நெரிசலை ஈடுசெய்ய இது நோக்கமாக உள்ளது. 17 ரயில்வே மண்டலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் முக்கிய பெரு நகரங்களுக்கும் சிறிய பிராந்திய இடங்களுக்கும் இடையிலான பயணிகளின் பயண சேவைகளை கையாள உதவும். இந்த சிறப்பு சேவைகளில் பல, அனைத்து வகை பயணிகளுக்கும் இடமளிக்கும் வகையில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுடன் இயங்கும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
பயணம் செல்லும் போது வாந்தி குமட்டலிலிருந்து விடுபட இதை follow பண்ணுங்க!
தெற்கு ரயில்வே

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com