உயரும் ரெயில் கட்டணம்... அதிர்ச்சியில் பயணிகள்!

இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Train
Train
Published on

பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிகளவு பொதுமக்கள் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். இரயில் பயணத்தில் இருக்கும் வசதிகள் பஸ்களில் இருப்பதில்லை என்பதாலும் பெருவாரியான மக்கள் இரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாக பயணிகள் இரயில் கட்டணங்களை இந்திய ரயில்வே உயர்த்த உள்ளது. ரெயில்வே துறையின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டும் வரும் ஜூலை 1-ந் தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தநிலையில், இதோடு சேர்த்து நீண்ட தூர ரெயில் பயணங்களுக்கான ரெயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல, 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாக உயர்த்தப்பட உள்ளது.

புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடைகால சிறப்பு ரெயில் சேவை இந்திய ரயில்வே அறிவிப்பு!
Train

2 பைசா அதிகரிக்கும்போது 1000 கிலோ மீட்டர் தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பை விட ரூ.20-ம், 1 பைசா அதிகரிக்கும்போது 1000 கிலோ மீட்டர் தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்வை விட ரூ.10-ம் அதிகரிக்கும். ரெயில்வே வாரியம் புதிய கட்டண கொள்கையை வகுப்பது தொடர்பாக வரைவை ரெயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தபின் இது அமலுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com