காசா போரில் ஐநாவில் பணிபுரியும் இந்தியர் மரணம்!

Gaza war
Gaza war

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது போர் நடத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது ஐநாவில் பணிபுரியும் Ex இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அதுவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாது மக்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் பஞ்சம் ஏற்பட்டு பல பிரச்சனைகளுக்கு நடுவில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்படி காசாவில் போர் நடக்கும்போது அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயிருக்கு பயந்து பாலஸ்தீனத்தில் எல்லைப் பகுதியான ரஃபாவிற்கு சென்று தஞ்சமடைந்தனர். இப்போது இஸ்ரேல் அங்கும் போர் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் இருப்பதால், அவ்விடத்தில் தாக்குதல் நடத்தினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஐநா மற்றும் சில நாடுகள் தெரிவித்தன. ஆனால், அப்போதும் இஸ்ரேல் அதைப் பற்றி கண்டுக்கொள்ளவில்லை.

அந்தவகையில், ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். இதற்கிடையே ஐநா சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தொடங்கியதிலிருந்து அங்கு சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படியுங்கள்:
எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும்? வெளியானது வெற்றி விகிதம்!
Gaza war

இதுகுறித்து ஐநா தரப்பு கூறியதாவது, “இந்த விபத்து  நடந்து சில மணி நேரமே இருக்கும் என்பதால் எங்களிடம் எந்தத் தகவல்களும் இல்லை. இது தொடர்பாக விரைவில் விரிவான ரிப்போர்ட்டை வெளியிடுகிறோம். அந்த கார் கான்வாயில் சென்று கொண்டு இருக்கும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுத்தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றது.

மேலும், மனிதாபிமான உதவிகள் செய்ய செல்வோரின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உடனடியாக அங்குப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்து அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com