எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும்? வெளியானது வெற்றி விகிதம்!

IPL Teams 2024
IPL Teams
Published on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் 8 போட்டிகளே மீதமுள்ளன. இரு அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறின. அந்தவகையில் தற்போது எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற வெற்றி விகிதம் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணி மற்றும் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறின. கொல்கத்தா அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் உள்ளது. சென்னை அணி மற்றும் ஹைத்ராபாத் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளன. குஜராத் அணி 10 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் 8 புள்ளிகளுடனும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

இதில் கொல்கத்தா அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 98 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. அந்த அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி எட்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. அதில் ஒரு பெரிய வெற்றிபெற்றால், அந்த அணி தகுதி பெற்று விடும்.

இதனையடுத்து ஹைத்ராபாத் அணிக்கு 81 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ளது. ஹைத்ராபாத் அணி விளையாடும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் பெரிய வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 சதவீத வெற்றி வாய்ப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. பெங்களூரு அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி மோத உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் அதிக ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

லக்னோ அணிக்கு 26 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த அணியின் ரன் ரேட் ( -0.769) மிகவும் குறைவாகவுள்ளதால், இனி விளையாடும் இரண்டு போட்டிகளில் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமே.

இதையும் படியுங்கள்:
CSK Vs RR: தோனி பெல்ட் அணிந்ததற்கு இப்படி ஒரு காரணமா? வெளியான தகவல்!
IPL Teams 2024

அடுத்ததாக பெங்களூரு அணி 20 சதவீத வெற்றி வாய்ப்புடன் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது குறைந்தது 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். சென்னை மற்றும் பெங்களூரு அணிகளைப் பொறுத்தவரை, மே 18ம் தேதி கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே RCB VS CSK என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

டெல்லி அணிக்கு 6 சதவீத வெற்றி வாய்ப்பும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 4 சதவீத வெற்றி வாய்ப்பும் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் அடிப்படையில் மிகவும் பின்தங்கி இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com