இந்தியர்கள் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம்: அதிர்ச்சி தகவல்!

இந்தியர்கள் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம்: அதிர்ச்சி தகவல்!
Intel

இந்தியர்கள் உணவு முறையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுவதாக ஆய்வறிக்கை முடிவு ஒன்று தகவல் வெளியாகி உள்ளது.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றும் இந்தியாவில் எத்தனையோ மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் என்பதே உண்மை. மேலும் கொரோனாவிற்கு பிறகு உணவு கிடைப்பதே சிக்கலாக மாறி இருக்க கூடிய நேரத்தில், கிடைக்கும் உணவும் மனித உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தனியார் ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு ஒன்றில் இந்திய மக்கள் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்து மிக குறைவாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உணவு பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் சத்துள்ள உணவை நோக்கி பயணித்த காலம் மாறி, தற்போது ருசியையும், துரித உணவை சாப்பிட ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் ரீதியான பிரச்சனைகள், திடீர் மரணங்கள் இந்தியாவில் அதிகரித்து.

சத்துள்ள உணவு என்றால் 32 சதவீதம் முழு தானியம், 23 சதவீதம் புரோட்டின், 5 சதவீதம் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது இந்திய மக்கள் 25 சதவீதம் பால் வகைகளை எடுத்துக் கொள்கின்றனர். 23 சதவீதம் கொழுப்பு, 15 சதவீதம் முழு தானியங்கள், 4 சதவீதம் மட்டுமே புரோட்டின் உள்ளிட்டவற்றை மக்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும் கிராமம், நகரம் என்று இரு நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களிடம் உணவு முறையில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கிறது. டீ,காபி ஆகியவற்றை அதிகம் பருகுகின்றனர். மேலும் மக்கள் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சத்துள்ள உணவுப் பொருட்களை வாங்குவதில் மக்கள் பெரிய ஆர்வம் செலுத்தவில்லை என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com