கனடாவில் தாக்கப்பட்ட இந்தியர்கள்… கண்டனம் தெரிவித்த இந்தியா !

canada
canada
Published on

பிராம்டன் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இந்தியர்கள் சிலர் சாமி தரிசனம் செய்துக்கொண்டிருக்கும்போது காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதியாக இருந்த நிஜ்ஜார் இந்தியாவில் இருந்தபோது அவர் நாட்டின் ஒற்றுமைக்கு கலங்கம் விளைவிப்பதாக சொல்லி புலனாய்வு குழு மூலம் அவரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிருந்து கனடாவிற்கு சென்று அங்கு குடியுரிமையும் வாங்கிக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் கொலைசெய்யப்பட்டார். இது கனடாவின் மொத்த போலீஸ் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. இதனால், அந்த அரசு இதனை மிகவும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது.

அந்த விசாரணையில் இந்த கொலைக்கும், இந்திய தூதரகத்திற்கும் சம்பந்தம் உள்ளதாக கனடா அரசு தெரிவித்தது. இதனை முற்றிலும் இந்திய அரசு மறுத்துவிட்டது. இதனால், கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிவிட்டது. இதையே இந்தியாவும் பதிலுக்கு செய்தது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீண்டும் திரும்பினர்.

சமீபத்தில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாதான் காரணம் என்று வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா காரணமில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

இதனால் இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்தவகையில் சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களை கொல்லும் சதி திட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புபடுத்தி கனடா அமைச்சர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பிராம்ப்டன் பகுதியில், ஹிந்து சபை கோவில் ஒன்றுள்ளது. அங்கு இந்திய தூதரகம் சார்பில் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு வருகைத் தந்தனர். இதனை எதிர்த்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் படியுங்கள்:
இந்து கோயில்களின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தானிகள்!
canada

மேலும் அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்தியர்களையும் தாக்க ஆரம்பித்தனர். ஹிந்துக்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து ஓட ஓட விரட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மோதலை தடுக்க முடியாமல் திணறினர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் முதல் இந்திய அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com