இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் மையம் சென்னையில் தொடக்கம்!

New Robotics Centre
New Robotics Centre
Published on

இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான ரோபோடிக்ஸ் மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 5 கோடி செலவில் குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

இந்த ரோபோடிக்ஸ் பிரம்மாண்டத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை KUKA மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி திரு. ஆலன் ஃபேம்,சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் திரு.பார்த்தசாரதி ஸ்ரீராம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மையத்தின் மூலம் 1000 பேர் செய்யக்கூடிய வேலையை தொழில்நுட்பம் மூலம் சில மணி நேரங்களிலையே செய்துவிடலாம். நவீன மிஷின் ஆகும் கார் தொழிற்சாலைகள்… மருத்துவத்துறை… எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை  எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பல மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இதனால், சர்வதேச அளவில் பெரிய engineerகளை நம்மால் உருவாக்க முடியும்.

இதுகுறித்து சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் மற்றும் KUKA நிறுவனத்தின் மேலாளர் ராகவன் பேசியுள்ளனர்.

“இந்த மிகப்பெரிய மையத்தை எதற்காக உருவாக்கினோம் என்றால்,  தமிழக அரசு பல தொழிற்சாலைகளை அமைக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர உள்ளார்கள். அந்த தொழிற்சாலைகளில் கண்டிப்பாக ரோபோட்ஸ் தேவைப்படும் என்பதால்தான் இந்த ஆரம்பம். மருத்துவத்துறையில் கிரிட்டிக்கல் சர்ஜரி, எக்ஸ்ரே எம்ஆர்ஐ ஸ்கேன்  பிசியோதெரபி போன்றவைகளை சிரமமின்றி எளிதாக கையாளும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன்  ரோபோட் ஒரு மிஷனாக இல்லாமல் டாக்டரின் கையாகவே இருந்து செயல்படும்  ரோபோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இதையும் படியுங்கள்:
தலையில் கேமராவுடன் சுற்றித்திரியும் பெண்… அப்பாவின் பாசத்திற்கு அளவே இல்லையா?
New Robotics Centre

மற்ற நாடுகள் ரோபோட்டிக்ஸ் முறையில் இந்தியாவை விட 300 சதவீத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் நிறைய பொருட்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியும் அதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும். 

சைனா கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ரோபோட்டிக் பாப்புலேஷனில் ஐந்து சதவீதம் கூட நம் நாட்டில் கிடையாது. மேலும்,கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் .” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com