தலையில் கேமராவுடன் சுற்றித்திரியும் பெண்… அப்பாவின் பாசத்திற்கு அளவே இல்லையா?

A girl with camera on her head
Pakistan Girl
Published on

பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் பெரிய சிசிடிவி கேமராவை தந்தை மாட்டியிருக்கிறார். அதனை எங்கு சென்றாலும் அவர் கழற்றுவதே இல்லை. இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

இப்போது எங்குப் பார்த்தாலும் பாலியல் செய்திகளே வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. சாதாரண பெண்கள் சிறுமிகள் முதல் சினிமா நடிகைகள்வரை தொடர்ந்து பாலியால் விவகாரங்களில் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக சமீபக்காலமாக இதுத்தொடர்பான செய்திகள் அதிகரித்தே வருகின்றன. பலர் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது அனைவரும் உங்களின் மகள்களுக்கு சொல்லித்தவருவது போல, உங்கள் மகன்களுக்கும் சொல்லித்தாருங்கள் என்று.

பெற்றோர்களும் பயந்தே பெண்களை வெளியே அனுப்புகிறார்கள். பொதுவாக சில பெற்றோர்கள் கூறுவார்கள், அதற்காக நாம் என்ன அவர்கள் கூடவேவா செல்ல முடியும் என்று. ஆனால், இங்கு ஒரு தந்தை கூட மட்டும்தான் செல்லவில்லை. ஆனால், 24 மணி நேரம் தனது போனில் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாராம்.

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பாசமான தந்தை தனது  மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மகளின் தலையில் கேமராவை கட்டிவிட்டிருக்கிறார். இந்த கேமரா மூலம் 24 மணி நேரமும், அந்த பெண் எந்த எல்லைக்குச் சென்றாலும், அவரது தந்தை தனது போன்மூலம் கவனித்துவருகிறார்.

அந்த பெண்ணின் தாயே இதைப்பார்த்து மிகவும் ஆச்சர்யமடைந்தார். மேலும் இவர் சாலையில் கேமராவுடன் நடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதனையடுத்துதான் அவர் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்:
உலகின் வயதான முதலை… 10 ஆயிரம் குழந்தைகளுக்கு அப்பா… ஒருகாலத்தில் லியோ… இன்று பார்த்திபன்!
A girl with camera on her head

பின்னர் செய்தியாளர்களும் அந்த பெண்ணை சந்திக்க ஆரம்பித்தனர். இந்த கேமராவை மாட்ட உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்று ஒரு செய்தியாளர் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், "இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தப்படியே, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார். என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார். அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.” என்றார்.

இதன்மூலம் இவர் Dad’s little princess என்பது மட்டும் தெரியவந்துள்ளது. ‘அப்பா சொன்னாருங்க’, ‘அப்பா சொன்னாருங்க’ என்று இந்த பெண் இன்னும் என்னெல்லாம் செய்ய போகிறாரோ???

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com