இந்தியாவின் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - விலை ரூ.240 கோடி..!

இந்தியாவின் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - விலை ரூ.240 கோடி..!

மும்பை ஓர்லி பகுதியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று ரூ.240கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் மிக விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பாக கருதப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று பலர் விரும்புகின்றனர் என்பதே. விலை மலிவாகவும் அதே நேரத்தில் ஆடம்பர வசதிகள் கொண்டவையாகவும் இருக்கிறது.

மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அன்னி பெசன்ட் சாலையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்று இந்த கோபுரங்கள் அழைக்கப்படு கின்றன. இதில் ஒரு கோபுரத்தின் (டவர்- பி) 63, 64, 65 ஆகிய தளங்களில் ‘பென்ட்ஹவுஸ்’ என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது.

இந்த நிலையில் தொழிலதிபர் கோயங்கா என்பவர் மும்பையில் உள்ள ஓர்லி என்ற பகுதியில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூபாய் 240 கோடி. இந்தியாவின் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுவே என்று கருதப்படுகிறது.

தொழிலதிபர் கோயங்கா வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் உள்ள ஓர்லி பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் சாலையில் இந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இரட்டை கோபுரங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்றும் பெண்ட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மொத்தம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான பத்திரப்பதிவு கடந்த புதன்கிழமை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரியல் எஸ்டேட் தொடர்பான ஆய்வு மற்றும் தரவரிசை நிறுவனம் ஒன்றின் தலைவர் பங்கஜ் கபூர் கூறும்போது, “இந்தியாவில் இன்று வரை விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மிக விலையுயர்ந்தது இந்த 240 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீடுதான். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் இதுபோன்ற சொகுசு குடியிருப்புகள் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com