உலகின் மோசமான ஏர்லைன்ஸ் பட்டியலில் இண்டிகோ… ஏன் தெரியுமா?

Indigo
Indigo
Published on

உலகின் சிறப்பான மற்றும் மோசமான ஏர்லைன்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு மோசமான ஏர்லைன்ஸ், இண்டிகோ என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் இயக்கப்படும் விமானச் சேவையின் செயல்திறனை பகுப்பாய்வு செய்து ஆண்டுதோறும் ஒரு பட்டியல் வெளியிடப்படும். அதில் மிகச்சிறந்த ஏர்லைன்ஸ் முதல் மோசமான ஏர்லைன்ஸ் வரை பட்டியலிடப்படும். இந்தப் பகுப்பாய்வில் வாடிக்கையாளரின் மதிப்பீடு, சரியான நேரத்தில் வருகை, கிளம்புதல், உணவு வழங்குதல், பயணிகளின் வசதி போன்றவை கணக்கில் எடுக்கப்படும். மேலும் விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன போன்றவற்றையும் சேர்ப்பார்கள்.

தற்போது 54 நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளின் கருத்தைப் பெற்று இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது.

ஆனால் வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில்
இண்டிகோ 103வது இடத்தில் உள்ளது. துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் 104வது இடத்திலும், இஸ்ரேலின் எல் எல் அல் ஏர்லைன்ஸ் 105வது இடத்திலும், பல்கேரியா ஏர் 106, நேவால் துனிசியா 107, போலந்து buzz 108, துனிசியாவின் துனிஸ் ஏர் 109 வது இடங்களில் உள்ளன.
அதேபோல் முதல் 10 சிறந்த ஏர்லைன்ஸ் பட்டியலை பார்ப்போம்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2ம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் united Airlines, நான்காவது இடத்தில் American Airlines, ஐந்தாவது இடத்தில் Play (Island) உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரத்தப் போக்கு கண் வைரஸ் – ருவாண்டாவில் 15 பேர் மரணம்!
Indigo

சமீபத்தில்கூட இந்தியாவில் ஏர் இந்தியா விமானம் பல நேரம் பல இடங்களில் கோளாறு கொடுத்தது. இதனால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். விமானத்தைப் பொறுத்தவரை தரம் மிகவும் முக்கியம். ஏனெனில் விமானம் மட்டும் விபத்துக்குள்ளானால், ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவே முடியாது. ஆகையால், இனியாவது விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் தரத்தை உயர்த்தும் என்று நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com