INLD தலைவர் பட்டப் பகலில் சுட்டுக்கொலை.. ஹரியானாவில் பரபரப்பு!

Naafe singh
Naafe singh

இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் நாஃபே சிங் நேற்று ஹரியானா மாநிலத்தில் சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாஃபே சிங் மற்றும் அவரது பாதுகாவலர் உட்பட மூன்று பேர் நேற்று மாலை காரில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜஜ்ஜர் பஹதுர்கர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென மற்றொரு காரில் வந்த சில மர்ம நபர்கள் நாஃபே காரின்மீது தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுப்பட்டனர். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள். சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் அந்த இடத்திற்கு வந்து, அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நாஃபே இறந்த விஷயத்தை லோக் தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாஃபே இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டின்போது சிலர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமும், அந்த இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலமும், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், இது ஒரு சொத்துத் தகராறு பிரச்சனையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்குக் காரணம், பஞ்சாப் பாடகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயாக இருக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாரடைப்பால் காலமானார்!
Naafe singh

நாஃபே சிறிது நாட்களுக்கு முன்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்துக் கூறியுள்ளார். அதேபோல் தனக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் கூறினார். ஆனால் அவருக்கு பாதுகாப்புத் தர மறுத்துவிட்டதாக லோக் தளம் கட்சி தலைவர்களில் ஒருவரான அபய் சௌதாலா கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனே கைது செய்யும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மாநிலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லையென்றும், சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், ஹரியானா மாநிலைத்தையே பரபரப்பாகிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com