ரீல்ஸ் போட்டு முதல்வரையே கவர்ந்த சிறுவர்கள்! – நேரில் அழைத்து ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.
Published on

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்ட்ராவில் வெளியிட்டு வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நகைச்சுவையாகவும் வீடியோக்களை வெளியிடும் இவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும், ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க. அதேபோல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தேவா, ஜீவா இருவரும் இன்ஸ்டாகிராமில், "ஹாய் கைஸ் நான் உங்கள் தேவா" என்ற அறிமுகத்துடன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள். சமூக வலைதளங்களில் தங்களுடைய கலகலப்பான பேச்சால் கல்வியை முன்னிறுத்தி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நகைச்சுவையாகவும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த சிறுவர்களின் கல்வி ஆர்வத்தை பாராட்டி, இவர்களை முதல்வர் நேரில் அழைத்து சந்தித்து, அவர் கையெழுத்திட்ட புத்தகங்களையும், பேனாவையும் பரிசாகக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.அவர்களின் வீடியோக்களை பார்ப்பதாகவும் கூறியவர் அவர்களுடைய கிரியேட்டிவிட்டியை வெகுவாக பாராட்டினார். அவர்கள் படிக்கும் பள்ளியில் இருக்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தவர், ரீல்ஸ் நல்லா போடுறீங்க தம்பி! அதே போல நல்லா படிக்கவும் செய்யணும் என்று அறிவுரையும் வழங்கினார்.

முதலமைச்சருடனான சந்திப்பின் பொழுது, "சார் உங்க நாய்க்குட்டி பற்றி சொல்லுங்க" என்று இவர்கள் கேட்ட வெகுளித்தனமான கேள்வி சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இவர்களது விழிப்புணர்வு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. youtube மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்கள் அம்மாவிடம் கொடுப்பதாகக் கூறி, குடும்பச்ப சூழலை உணர்ந்து கல்வியை முன்னிறுத்தி வீடியோக்களை இவர்கள் வெளியிடுகின்றனர்.

பொழுதுபோக்கு நல்லது தான் தம்பிகளா. ஆனால் கல்வி மிகவும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்!

இதையும் படியுங்கள்:
கோலிவுட்டில் புதிய ட்ரெண்ட் : சம்பளத்திற்கு பதில் லாபத்தில் பங்கு பெற்ற ராதிகா! வசூலில் தெறிக்கவிட்ட 'தாய்க்கிழவி'!
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com