இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இன்ஸ்டாகிரம் செயலியை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸ்கள் தற்போது இந்தியாவில் ரொம்பவே பிரபலமாகிவிட்டதால் இன்றைய 2 கே கிட்ஸ்கள் மட்டும் இன்றி 80, 90 கிட்ஸ்கள் கூட அதில் மூழ்கி கிடப்பதை காண முடிகிறது. பயனர்களை கவருவதற்காக அவ்வப்பொது புதிய அப்டேட்களை இன்ஸ்டகிராம் அளித்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும்.
டிக்டாக் விதித்துள்ள 1,000 பின்தொடர்பவர்கள் நிபந்தனையை போல இன்ஸ்டாவும் கொண்டு வந்துள்ளது. இனி லைவ் செல்ல முயற்சிக்கும் தகுதியற்ற பயனர்களுக்கு, அதாவது ஆயிரம் பாலோயர்களுக்கு கீழ் வைத்து இருக்கும் பயனர்களுக்கு "உங்கள் கணக்கு லைவ் அம்சத்திற்கு இனி தகுதியற்றது" என்ற மெசேஜ் தோன்றும் என அறிவித்துள்ளது.