மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்திற்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

EB
EB
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்வாரியத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதன்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும்.

ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப் பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.

நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும்.

மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்தப் பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.

ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக உள்ள மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும்.

அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகிதப் பட்டியலாக இருக்க வேண்டும்.

சிலர் ஒரே வீட்டில் தனித் தனிக் குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் நோக்கம் என்னவென்றால் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும்

இதுகுறித்து தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com