இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), அமெரிக்காவைச் சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ப்ளூ பேர்ட் (BlueBird) செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்த செயற்கைக்கோளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது சிறப்புத் டெர்மினல்கள் எதுவும் இல்லாமல், நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க முடியும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) இணைந்து உருவாக்கிய உலகின் மிக விலையுயர்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நிசார் (NISAR), ஜூலை 30, 2025 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச் சாதனை, இரு நாடுகளின் விண்வெளி தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரோ தனது அடுத்த ப்ராஜெக்டிற்கு தயாராகி வருகிறது. அதாவது அடுத்த ப்ளூ பேர்டு செயற்கைகோள் ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.
இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் இதுகுறித்து பேசுகையில், "அமெரிக்காவின் இந்த 6,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள், செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரும் என்றும், சில மாதங்களுக்குள் LVM3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கூட, 1 சென்டிமீட்டர் துல்லியத்துடன் கண்காணிக்கும் அசாத்திய திறன் கொண்டது. நிசார் செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒருமுறை புவியின் முழு மேற்பரப்பையும் முழுமையாக ஸ்கேன் செய்யும்.
ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள், சுமார் 2,400 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப்பெரிய தகவல் தொடர்பு அமைப்பைக் கொண்டுள்ளது. இதன்மூலம், உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக இணைய சேவையை வழங்க முடியும். குறிப்பாக, கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் பேரிடர் காலங்களில், சாதாரண செல்லுலார் சேவைகள் இல்லாத இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு விநாடிக்கு 12 Mbps (மெகா பிட்ஸ்) வரை தரவு வேகத்தை வழங்க முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தத் திட்டமானது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான விண்வெளி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.