‘iPhone 17’ சீரிஸ் இன்று அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இன்று (செப்டம்பர் 9-ம்தேதி) இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.
iPhone 17 series
iPhone 17 series
Published on

ஆப்பிள் ஐபோன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டீவ் ஜாப்ஸால் என்பவரால் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோனில் பல்வேறு மாடல்கள் உள்ள நிலையில், iPhone 16, iPhone 16 Pro, iPhone 15, மற்றும் iPhone 14 போன்ற புதிய மாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாடலுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படும். அதேசமயம் புதிய மாடல்கள் வெளிவரும் போது முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்படும். ஐபோன்கள் அவற்றின் வன்பொருள், கேமரா மற்றும் செயல்திறன் ஆகியவற்றால் அதிக மக்கள் விரும்பும் போனாக அறியப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்தாலே டெக் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது ஒரே ஒரு விஷயத்திற்காக தான். அது புதிய ஐபோன் வெளியீடு. அந்த வகையில் இந்தாண்டுக்கான மெக அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இன்று (செப்டம்பர் 9-ம்தேதி) இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
இதனால்தான் ஐபோன் 15 ப்ரோ சூடாகுது! ஆப்பிள் கொடுத்த விளக்கம்!
iPhone 17 series

ஐபோன் 17 தொடர் வரிசையில் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max போன்ற மாடல்கள் இன்று வெளியாக உள்ள நிலையில், இவற்றுடன் சேர்த்து புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் AirPods Pro 3 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் விதமாக ஐபோன் 17 தொடர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐபோன் தொடரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் முன்பை விட மேம்பட்டதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள் பிரியர்களை குஷியாகும் விதமாக அந்த மாடல்களின் ஒட்டுமொத்த பீச்சர்களும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

ஐபோன் 17 வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விலை & சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

5.5 மி.மீ. மெல்லிய அலுமினிய ஃபிரேம் மற்றும் 150 கிராமிற்கும் குறைவான எடை, A19 சிப்செட், மோஷன் ப்ரோ தொடுதிரை போன்றவை இதன் சிறப்புகள். இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இதுவரை வெளியான பெரிய திரையுடன் கூடிய ஐபோன்களில் இதுவே மிகவும் மெல்லிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட Pro மற்றும் Pro Max மாடல்களில் இருந்து வேறுபடும்.

6.6 அங்குலம் ஓஎல்இடி திரை கொண்டது. தொடுதிரை 120Hz திறனில் கொடுக்கப்பட்டுள்ளது. 3,600mAh பேட்டரி திறன் உள்ளது. பின்புறம் 48MP கேமராவும், முன்பக்கம் 24MP கேமரா வசதியும் உள்ளது. புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) AI அம்சங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

iPhone 17 Air மாடலில் 6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, டைட்டானியம் + கிளாஸ் பாடி மற்றும் 5.5 எம்எம் தடிமன் வருகிறது. ஏ19 ப்ரோ சிப் மற்றும் 12 ஜிபி ரேம், இவற்றுடன் 24 எம்பி செல்பீ + 48 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் 2900mAh பேட்டரி திறன் மற்றும் ஆப்பிள் சி1 மோட் உள்ளது.

இந்த தொடரில் iPhone 17 Pro மற்றும் Pro Max அனைவரையும் கவரும் வகையில் மிகவும் சக்திவாய்ந்த மாடல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் A19 Pro சிப்செட் மற்றும் 12GB RAM மற்றும் கேமரா அமைப்பிலும் ஒரு பெரிய மாற்றம் இருக்கும். மேலும் இதில் 48MP டிரிபிள் கேமரா (வைட், அல்ட்ராவைட், டெலிஃபோட்டோ), 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் மெக்கானிக்கல் அபெர்ச்சர் போன்ற தொழில்முறை திறன்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சிறப்பு அம்சமாக 3,700 mAh-க்கும் குறைவான பேட்டரி திறன். பெரிய பேட்டரியை விட, மெல்லிய வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிக் மற்றும் வேப்பர் சேம்பர் கூலிங் வருகிறது.

ப்ரோ மாடலில் கிடைத்த பெரும்பாலான பீச்சர்கள் iPhone 17 Pro Max மாடலில் கிடைக்கிறது. 6.9 இன்ச் டிஸ்பிளே உடன் 5000mAh பேட்டரி திறன் கிடைக்க இருக்கிறது.

இணையத்தில் கசிந்த தகவலின் படி, இதுவரை இல்லாத சிறப்பு அம்சமாக ஐபோன் 17 ப்ரோவில் டிரிபிள்-லென்ஸ் கேமராவின் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இதில் ஃபிளாஷ் வலதுபுறமாக மாற்றப்பட்டுள்ளதால் ஆப்பிள் லோகோ சற்று கீழே நகரக்கூடும்.

இதையும் படியுங்கள்:
ஐபோன் வாங்க அலைமோதும் அமெரிக்க மக்கள்… என்னவா இருக்கும்??
iPhone 17 series

அறிக்கைகளின்படி, iPhone 17 ஆரம்ப விலை சுமார் ரூ.89,900 ஆகவும், iPhone 17 Air சுமார் ரூ.95,000 ஆகவும், iPhone 17 Pro Max சுமார் ரூ.1,64,900 ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 17 முன்பதிவு செப்டம்பர் 12-ம்தேதி தொடங்கி செப்டம்பர் 19-ம்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com