முற்றும் இஸ்ரேல் - ஈரான் போர்: ரூ.200-க்கு செல்லப்போகும் பெட்ரோல் விலை..!
இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.200 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே உட்சக்கட்ட போர் மூண்டுள்ளது. ஆபரேஷன் ரோரிங் லயன் (Operation Roaring Lion) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம்தேதி, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், உளவுத்துறை அலுவலகங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தத் தாக்குதலின் எதிரொலியாக ஈரானில் முழுமையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதுடன், இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது (Internet Blackout). இந்தியாவிலிருந்து சுமார் 2,100 கி.மீ தொலைவில் இந்த போர் நடந்தாலும், இதன் தாக்கம் இந்திய மக்களின் பாக்கெட்டுகளையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.
இதனால், ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz)பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் 80% இந்த பகுதி வழியே தான் வரும். ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாக அறியப்படுகிறது. தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடி விடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாகவே எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் பெறப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கும்.
இந்தியாவின் 50 விழுக்காடு எண்ணெய் இறக்குமதி இந்த ஒரு குறுகிய கடல்வழியைச் சார்ந்தே உள்ளது. அதாவது, இந்த போரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்று இந்தியாவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை தற்போது பேரல் ஒன்றுக்கு 73 டாலரைத் தாண்டியுள்ள நிலையில் போர் தீவிரமடையும் பட்சத்தில், இது 110 டாலர் முதல் 130 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டு எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏற்கனவே எரிபொருள் விலை அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்படும் இந்த விலை ஏற்றம், பெட்ரோல் விலையை ரூ.150 முதல் ரூ.200 வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எரிபொருள் விலை உயர்ந்தால், அதனுடன் சேர்ந்து காய்கறி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்து பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகளாவிய போர் பதற்றம் எப்போதும் பங்குச் சந்தையில் (Share Market) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி அதலபாதாளத்திற்குத் தள்ளும். முதலீட்டாளர்கள் அச்சத்தில் பங்குகளை விற்பதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பெரும் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பெயிண்ட், ஏவியேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை பங்குகள் அதிகம் பாதிக்கப்படும்.
அத்துடன் போர் காலங்களில் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் கருதப்படுவதால், அதன் விலை சவரனுக்கு பல ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும். இன்று கூட தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது. அந்தவகையில், சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, பிப்ரவரி 28-ம்தேதி, சவரனுக்கு ரூ.5,200 வரை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,24,400க்கு விற்பனையானது.
குறிப்பாக இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 விழுக்காடு இறக்குமதியை சார்ந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும், மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு இப்போதும் முக்கியமானது. ஈரான் மீதான இந்தத் தாக்குதல் ஒரு நீண்ட காலப் போராக மாறினால், இந்தியாவின் இறக்குமதி செலவு பல பில்லியன் டாலர்கள் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அத்துடன், இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என்பதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இப்போதே மாற்று வழிகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால், ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் 80% இந்த பகுதி வழியே தான் வரும்.

