மரண தண்டனை பட்டியலில் ஈரான் முதலிடம்… ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி!

Death Penalty
Death Penalty

உலக நாடுகளில் குற்றவாளிகளுக்கு வழங்கும் மரண தண்டனை பற்றிய அறிக்கையை லண்டனை தலைமாயகக் கொண்ட Amnesty International வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி ஈரான் அதிக மரண தண்டைனைகளை வழங்கும் நாடாக உள்ளது.

Amnesty International மனித உரிமைகளுக்காக இரண்டு முறை நோபல் பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிறுவனமே ஆண்டுதோறும் மரண தண்டனைகளைக் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டும் இந்த நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2023ம் ஆண்டுதான் அதிகப்படியான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாகவே இந்த அதிகரிப்பு இருந்து வருகிறது என்றும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் அதிகப்படியான தண்டனை அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

2023ம் ஆண்டு மொத்தம் 16 நாடுகளில் 1,153 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது 2022ம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும். அதுவும் ஈரானே அதிக மரண தண்டனை அளிக்கும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு 853 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அதே ஈரானில் 2022ம் ஆண்டில் 576 பேர்களுக்கும், 2021ம் ஆண்டில் 314 பேர்களுக்கும் மரண தண்டனைத் தரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஈரானில் மரண தண்டனை எண்ணிக்கைக் கூடி வருவதையே இந்தத் தகவல் எடுத்துக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு ஈரானில் மரண தண்டனை அளித்த முக்கால் வாசி நபர் வெறும் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மேலும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு, ஈரான் மக்கள் தொகையில் அதிகமாக வாழும் விளிம்பு நிலை சமூகத்தில் உள்ளவர்களையே குறிவைத்து இந்த கொடிய தண்டனையை தருகிறது, ஈரான் அரசு.

பாகிஸ்தான் கடந்த ஆண்டு போதைப் பொருட்கள் வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை இல்லை என்று அறிவித்தது. அதேபோல் மலேசியாவும் கட்டாய மரண தண்டனை இல்லை என்று கூறியது. மேலும் ஒருசில நாடுகள் மரண தண்டனை என்ற சட்டத்தையே ரத்து செய்தன. உலகில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளில் 15 சதவீதம் சவூதி அரேபியாவில் தான் தரப்படுகின்றன.

தலையைத் துண்டித்துக் கொல்லும் கொடூர மரண தண்டனைக்குப் பெயர்பெற்ற சவூதி அரேபியாவில் 172 பேருக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்:
சென்னை பெரும்பாக்கத்தில் பரவிய காட்டுத்தீ… அரை கிலோமீட்டருக்குப் பற்றி எரிந்த சதுப்பு நிலம்!
Death Penalty

கடந்த ஆண்டு , முதல் முதலாக ஒரு பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை தந்திருக்கிறது சிங்கப்பூர்.

சீனாவில் மரணதண்டனை பற்றிய தரவுகளைத் இந்த அறிக்கை தரவில்லை என்றாலும், சுமார் 1000 பேர்களுக்கும் மேல் அங்கு மரண தண்டனையால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகையால் சீனா, ஈரான், சவூதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மரண தண்டனை பட்டியலில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளன.

அதேபோல்,வட கொரியா மற்றும் வியட்நாம் பற்றிய புள்ளிவிவரங்களையும் எடுக்க முடியவில்லை என்று Amnesty International அமைப்புத் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com