சென்னை பெரும்பாக்கத்தில் பரவிய காட்டுத்தீ… அரை கிலோமீட்டருக்குப் பற்றி எரிந்த சதுப்பு நிலம்!

Perupakkam Fire
Perupakkam Fire

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில், நேற்றிரவு திடீரென்று காட்டுத்தீ பரவியது. அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பரவிய காட்டுத்தீயை பல மணி நேரமாக முயற்சி செய்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

சென்னை கோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் நிலயத்தின் பின்புறம் உள்ள சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது. இந்தநிலையில்தான் நேற்று இரவு திடீரென்று அந்த நிலம் தீ பற்றி வேகமாக பரவ ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் புற்கள் காய்ந்து இருந்ததால், மிகவும் கோரமாக எரிய ஆரம்பித்தது.

இதனால், கோரைப்புற்கள், செடிகள், மரங்கள் என அனைத்துமே எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர், காட்டுத்தீயின் வேகம் கண்டு ஸ்தம்பித்து நின்றனர். சதுப்பு நிலம் என்பதால், அவர்களால் உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட முடியவில்லை. இதனால் வெகு நேரம் தீயை அணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் இணைந்து திட்டம் போட்ட பின்னரே களத்தில் இறங்கினர். இதற்கிடையே தீயும் வேகமாகப் பரவி அரை கிலோ மீட்டர் தூரம் வரை பரவியது. ஆகையால், முதலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயன்றனர். இந்தத் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
30 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத பர்கர்… டேய்! என்னடா கலந்தீங்க? 
Perupakkam Fire

ஆனால், அதிகப்படியான வெப்பத்தால் சதுப்பு நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டதா? உயர் மின்அழுத்த கம்பியால் தீவிபத்து ஏதேனும் ஏற்பட்டதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து அருகே உள்ள மக்கள் அந்தச் சம்பவத்தை போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். பெரும்பாக்கம் பகுதியே தற்போது கரும்புகை மண்டலங்களால் சூழ்ந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com