ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

Iran vs Isreal
Iran vs Isreal
Published on

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு கருதி, இந்திய வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து காசா இஸ்ரேல் இடையே போர் வலுபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அழித்த ஈரானுடன் இஸ்ரேல் போர் செய்ய ஆரம்பித்தது. தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவொரு அவசரத் தேவைக்கும் அல்லது உதவிக்கும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி எண்கள்:

  • +98 9128109115

  • +98 9128109109

மேலும், டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரியான cons.tehran@mea.gov.in மூலமும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பன்றிக்காய்ச்சல்: அறிகுறிகளும் ஆலோசனைகளும்!
Iran vs Isreal

ஈரானில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்களை டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது அவசர காலங்களில் அவர்களை எளிதாகத் தொடர்பு கொள்ளவும், தேவையான உதவிகளை வழங்கவும் உதவியாக இருக்கும்.

இந்திய வெளியுறவு அமைச்சகம், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையானது என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

இந்தப் பதற்றமான சூழலில், இந்தியர்கள் அனைவரும் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்படுமாறும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com