#BIG NEWS : இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் ஈரான் - அமெரிக்கா பேச்சு வார்த்தை அமைதிப் பாதைக்கு வழிவகுக்குமா?

iran - us war update
iran - us war update SOURCE:ALJAZEERA
Published on

அதிபர் டிரம்பிடமிருந்து தற்காலிகமாக 2 வாரங்கள் போர் நிறுத்த அறிவிப்பு வந்த நிலையில் நிரந்தர போர் தொடர்பாக ஈரானின் விடுத்திருந்த 10 கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சொன்ன ட்ரம்ப் பின்னர் அவைகள் ஏற்புடையதாக இல்லை என அதிலிருந்து பின்வாங்கினார்.

அதில் லெபனான் ,காஸா மற்றும் ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்பதையும் ஈரான் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது

ஆனாலும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை லெபனானின் பெய்ரூட் பகுதிகளில் நடத்திய தாக்குதலில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில் தான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் அமெரிக்கா-ஈரானின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் லெபனானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்றும் எந்த ஒரு சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. லெபனானில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, சில நிபந்தனைகளுடன் ஈரான் அமெரிக்காவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக லெபனான் மற்றும் பிற பிராந்தியங்களில் போர் நிறுத்தம், 'ஹோர்முஸ் நீரிணை" மீதான விவகாரங்கள் மற்றும் நீண்டகால நிரந்தர அமைதி உடன்படிக்கை ஆகியவைகள் இந்த பேச்சு வார்த்தையின் நோக்கங்களாக கூறப்படுகிறது.

இதற்காக, அமெரிக்க தரப்பில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான சிறப்பு பிரதிநிதிகள் குழு

இஸ்லாமாபாத் வந்திருக்கிறது.ஈரான் தரப்பில் இருந்து, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை அமைச்சர் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!
iran - us war update

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com