9 கேரட் தங்கம் ஒர்த்தா..? சாமானியர்கள் வாங்கலாமா..?

22 காரட் தங்கத்தின் விலை உயர்வுக்கு மாற்றமாக தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 9 காரட் தங்கம் சாமானிய மக்களுக்கு கைக்கொடுக்கமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தங்கம்
தங்கம்
Published on

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் 22 காரட் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 30-ம்தேதி)ரூ.76,960-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.390-ம், பவுனுக்கு ரூ.3,120-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தும் அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளது. தங்கத்தின் விலையுடன் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 80,000 ரூபாயை தாண்டும். இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவது சாமானிய மற்றும் ஏழை மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இனிமேல் தாலிக்கு கூட தங்கம் வாங்க முடியாதோ என்ற கவலை ஏழை மக்களின் மனதில் எழத்தொடங்கி உள்ளது.

இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டும் என்றும் பொருளாதார வல்லூநர்கள் கூறுகின்றனர். இனிவரும் காலங்களில் தங்கம் மட்டுமே உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்ககூடிய ஒரு பெரிய சக்தியாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என்பது தான் உண்மை.

இதையும் படியுங்கள்:
‘வந்தாச்சு 9 காரட் தங்கம்’...பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...விலை எவ்வளவு தெரியுமா?
தங்கம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒரு சிலர் தங்கத்தின் அதீத ஆசையின் காரணமாக தூய்மை குறைவாக அதாவது 18 கேரட், 14 கேரட் அளவில் உள்ள தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்தை கவனித்த மத்திய அரசு அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஏழைமக்களின் மனக்கவலையை போக்கும் வகையிலும், ஹால்மார்க் தரநிலைகளில் 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க்கிங் அமைப்பின் 9 கேரட் தங்கமும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. 9 காரட் தங்கத்திற்கு ஹால்மார்க் அங்கீகாரம் அளித்திருப்பது, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு தங்க நகைகள் வாங்குவதை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BIS அமைப்பு கட்டாய ஹால்மார்க் பிரிவில் 9 கேரட் நகைகளை சேர்த்துள்ள நிலையில், இனி ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பட்டியலில் 24K, 22K, 20K, 18K, 14K உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் தூய்மை தன்மை :

24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 சதவீதம் தூய்மையான சுத்தமான தங்கமாகும். இதன் விலை கிராமுக்கு தேராயமாக 10,402 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் தங்கத்தில் 91.6 சதவீதம் (916 KDM) மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 8.4 சதவீதம் வெள்ளி, வெண்கலம், செம்பு, துத்தநாகம் போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை கிராமுக்கு தேராயமாக 9,535 ரூபாயாகும்.

20 காரட் தங்கத்தில் 83.3 சதவீதம் மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 16.7 சதவீதம் மற்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை கிராமுக்கு தேராயமாக 8,650 ரூபாயாகும்.

18 காரட் தங்கத்தில் 75 சதவீதம் மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 25 சதவீதம் வெள்ளி, வெண்கலம், செம்பு, துத்தநாகம் போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை கிராமுக்கு தேராயமாக 7,895 ரூபாயாகும்.

12 காரட் தங்கத்தில் 50 சதவீதம் மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 50 சதவீதம் வெள்ளி, வெண்கலம், செம்பு, துத்தநாகம் போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை கிராமுக்கு தேராயமாக 4,850 ரூபாயாகும்.

அதேநேரத்தில், 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5%ல் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதாவது 9 கேரட் தங்கத்தில் 1000 கிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும். இதன் விலை ஒரு கிராம் தேராயமாக 3,650 ரூபாயாகும்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சில சிறந்த வழிகள்!
தங்கம்

தற்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,053க்கும் ஒரு சவரன் தேராயமாக ரூ.83,216க்கும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் 9 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,650க்கும், ஒரு சவரன் ரூ.29,000க்கும் விற்பனையாகிறது.

நன்மைகள் :

24 காரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில், 9 காரட் தங்கத்தின் விலையும் குறைவு, இதை வடிவமைப்பதும் எளிதும். எனவே குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏழை, எளிய மக்களுக்கு இந்த 9 காரட் தங்கம் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் என்று சொல்லாம். ஏனெனில் மாதந்தோறும் சிறுகசிறுக சேமிக்கும் ஏழைகளுக்கு ஒரு சவரன் 22 காரட் தங்கம் 76,960 கொடுத்து வாங்க முடியாது. அதுவே ஒரு சவரன் 9 காரட் தங்கம் ரூ.3,650 கொடுத்து கண்டிப்பாக வாங்க முடியும். தங்களாலும் தங்க நகைகளை வாங்கி அணிய முடியும் என்ற அவர்களின் கனவு இதன் மூலம் நனவாகும். தற்போது பல தங்க நகைகள் விரைவில் உடைந்து விடுவதாக மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதேநேரத்தில் இந்த 9 காரட் தங்கத்தில் மற்ற உலோகங்களும் சேர்க்கப்படுவதால் தங்க நகை சீக்கிரமாக உடையாது, வளையாது என்றும் இதன் உறுதிதன்மை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 9 காரட் தங்கத்தில் எந்த டிசைன்களை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதால், இளைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு 9 காரட் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதேபோல் மறுவிற்பனை செய்யும் போது 9 காரட் தங்கத்தில் உள்ள 37.5% தூய்மையான தங்கத்திற்கான பணம் திரும்ப கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தீமைகள் :

நம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தங்கத்தின் மீதான அதீத ஆர்வத்திற்கு ‘மஞ்சள்’ கலர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஆனால் 9 காரட் தங்கத்தின் நிறம் ஆன்டிக் நகைகளை(Antique jewelry) போன்று இருக்கும். இது 22 காரட் தங்கத்தை போல் பளபளப்பாக இல்லாவிட்டாலு, ஒரு சதவீதம் டல்லாக இருக்கும், அதாவது தங்கத்தை விட ஒருபடி குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 22 காரட் தங்க நகைகளை போல் இதை தினமும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இதை அடிக்கடி பயன்படுத்தும் போது கலர் மங்கி கருத்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது கருத்து விடும் என்பதால் இதில் தங்கம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.

ஏனெனில் இதில் அதிகளவு சேர்க்கப்படும் மற்ற உலோகங்களின் காரணமாக, காலப்போக்கில் இதன் நிறம் மங்கக்கூடும் என்றும் கூறுகின்றனர். 9 காரட் தங்கத்தில், தங்கத்தின் அளவும் குறைவு மற்றும் விலை குறைவாக இருப்பதால் இதன் தரமும் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Gold
Gold

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், தங்கத்தை சேமிக்க நினைப்பவர்கள், தங்கத்தை ஆபரணமாக வாங்கி அணி விரும்புபவர்கள் 22 காரட் என்கிற 916 தங்கத்தை வாங்குவது தான் சிறந்தது. ஏனெனில் எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும், அவசர தேவைக்கு நகையை அடமானம் வைக்க வேண்டும் நினைப்பவர்களுக்கு 9 காரட் தங்கம் பலன் தராது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இதில் தங்கம் 37 சதவீதம் மட்டுமே உள்ளதால் நகை தொடர்ந்த அணியும் போது நிறம் மங்கி விடும் மற்றும் அடமானம் வைத்தாலும் பணம் கிடைப்பது கஷ்டம் என்பதால் 9 காரட் தங்கத்தை வாங்க விருப்புபவர்கள் இந்த நகையை வாங்குவது மிகவும் குறைவு. அதுமட்டுமின்றி 9 காரட் தங்கம் இப்போது தான் மார்க்கெட்டிற்கு வருவதால் இதனை மறுவிற்பனை செய்ய முடியுமா, மறுவிற்பனை செய்தால் லாபம் கிடைக்குமா, இதில் தங்கம் குறைந்தளவில் உள்ளதால் வங்கிகளில் இந்த நகையை அடமானம் வைத்தால் பணம் கிடைக்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் உள்ளது என்றே சொல்லலாம்.

நடைமுறையில் 9 காரட் தங்கம் பற்றிய தெளிவு குறித்து வங்கிகளோ, நகைக்கடைகளோ இனிவரும் காலங்களில் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த நகையை வாங்கலாமா வேண்டாமா என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்கும். அதுவரை 9 காரட் தங்கம் சாமானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும் நடைமுறையில் எந்த அளவிற்கு சாத்தியம் என்பது போகபோகத்தான் தெரியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் மறுவிற்பனை செய்யும் போது 9 காரட் தங்கத்தில் உள்ள 37.5% தூய்மையான தங்கத்திற்கான பணம் திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அது எந்த அளவிற்கு சாத்தியம் என்றும் தெரியவில்லை.

பெரும்பாலான கடைகளில் தற்போது 14 காரட் வரை தங்கம் நகைகள் நடைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை இன்னும் 9 காரட் தங்கம் நடைமுறைக்கு அவ்வளவாக வரவில்லை என்றாலும், அவை வர சில காலங்கள் ஆகும் என்றும் தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

22 காரட் தங்க நகைகளுக்கு உள்ளது போன்றே 9 காரட் தங்க நகைகளுக்கும் சேதாரம், செய்கூலி உள்ளது என்றும் 9 காரட் தங்கத்தின் தரம் குறையும் போது விலை குறையுமே தவிர மற்ற எதுவும் குறையாது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதிலுமுள்ள தங்கத்தில் இந்திய பெண்களிடம்தான் அதிகம் உள்ளதாம்! எவ்வளவு சதவிகிதம் தெரியுமா?
தங்கம்

சுருக்கமாக செல்வதென்றால், 9 காரட்டில் உள்ள அதன் குறைந்த தங்கத்தின் உள்ளடக்கம் காரணமாக இது முதலீட்டிற்கு உகந்ததல்ல என்றும் தினசரி பயன்பாடு மற்றும் அலங்காரத்திற்காக மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com