ஐநாவிலிருந்து விலகுகிறதா இஸ்ரேல்?

UNO
UNO
Published on

அமெரிக்கா ஐநாவிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா பயணம் செய்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நெதன்யாகுவும் சந்தித்திருக்கிறார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.  மறுபக்கம் இஸ்ரேல் காசாவுடனான போரை நிறுத்தியது. பணயக் கைதிகளை இருநாடுகளும் விடுவித்து வருகின்றன.

 6.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்காக காத்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சந்தன மரம் வளர்ப்பில் லாபம்: குறைந்த செலவில் அதிக வருமானம்!
UNO

இப்படியான நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு அறிவிப்பை விட்டிருக்கிறார்.

நேற்று இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவிற்கு வருகைத் தந்திருந்தார். அப்போது அமெரிக்கா அதிபரும் இஸ்ரேல் அதிபரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

அப்போது டொனால்ட் ட்ரம்ப் காசா பகுதிகளை அமெரிக்கா கையகப்படுத்துகிறது என்றும், காசா ஒரு உலகத்திற்கான இடம் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில்தான் இஸ்ரேல் ஐநாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. முதலில் அமெரிக்க அதிபர் ஐநாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பேசுகையில், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது.” என்று அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:
மற்றவர் பேசும்போது கவனமாக கேட்பது உறவுகளை மேம்படுத்தும்!
UNO

மேலும் "எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!” என்று குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com