பாலுடன் மருந்துகள் உட்கொள்வது சரியா?

பாலுடன் மருந்துகள் உட்கொள்வது சரியா?

பாலுடன் மருந்து / மாத்திரைகள் சாப்பிடுவது சரியானதா என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் பாலுடன் மருந்துகள் எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் பழ ஜூஸ், குளிர் பானங்களுடன் மருந்து எடுத்து கொள்கிறார்கள். அதேபோல குழந்தைகளுக்கும் பாலுடன் மருந்தை சேர்த்து கொடுக்கிறார்கள். அப்படிச் செய்வது சரியா? எல்லா மருந்துகளையும் பாலுடன் சேர்த்து சாப்பிடலாமா? அது நல்லதா மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

சாதாரணமாகவே நாம் அருந்தும் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. கால்சியம் பல மருந்துகளின் ஆற்றலை குறைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இங்கு எந்த மருந்துகளுடன் பால் அருந்தக் கூடாது என்பதை காணலாம். பாலுடன் மருந்து உட்கொள்வதை வயதானவர்கள் அதிகம் செய்கிறார்கள். குழந்தை களுக்கும் அதை பழக்குகிறார்கள். பால் போன்ற பானங்களோடு மருந்து உட்கொள்ளும்போது மருந்தின் வினையாற்றும் விளைவைக் குறைக்கும் என ஜெர்மன் மருந்தாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உர்சுலா செலர்பெர்க் கூறியுள்ளார். 

பாலில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் மருந்து கலப்பதைத் தடுக்கிறது. அதனால் மருந்தின் உட்கொள்வதின் தாக்கம் குறையும். ஆகவே பெரும் பாலான மருத்துவர்கள் பாலுடன் மருந்து உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

பாலுடன் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. ஒருவேளை நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டால், மறந்தும் பாலுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் மருந்தின் வீரியம் குறைந்து விடும். பல சமயங்களில் இது உங்கள் வயிற்றில் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.  ஆகவே, பாலுக்கு பதில் தண்ணீரையே உபயோகியுங்கள். ஆரோக்கியத்தை காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com