பொருளாதாரத் தடை விதிக்கப்படும்? இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா!

American president
Joe Biden

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடாக இருந்தாலும் ஏன் இவ்வாறு கூற வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம். 

அமெரிக்காவும் இந்தியாவும் பல ஆண்டுகளாக நட்பு நாடாக இருந்து வருகின்றன. இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்தபோதிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நன்றாகவே இருக்கிறது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்நிலையில் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, திடீரென இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது, சமீபத்தில் ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதுதான். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களில், அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானும் அமெரிக்காவும் எதிரி நாடுகளாகும். எனவே ஈரானுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளும் எந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “ஈரான் சபஹர் துறைமுகத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது எங்களுக்குத் தெரியும். இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது தொடர்பாக இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம். ஈரான் நாட்டுடன் ஒப்பந்தம் போடுபவர்கள் மீதும் தடை விதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
“அல்லாவின் ஆண்டிற்குள் இந்தியா துண்டு துண்டாக உடையும்” – பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்!
American president

ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா எப்போதும் மோதல் போக்கையே கையாண்டு வருவதால், அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் வைக்கும் எந்த நாடுகளையும் இவர்கள் எதிர்க்கத் துணிவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com