பிரதமர் மோடி விண்வெளிக்குச் செல்கிறாரா? இஸ்ரோ தலைவர் சோம்நாத் சொன்னது என்ன?

Modi
Modi

விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமரும் ஒருவராக இருப்பார் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி இதுபோன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வம் காட்டுபவர். அதாவது கடலுக்கு அடியில் செல்வது, விண்வெளிக்கு செல்வது போன்றவற்றில். இதற்கு உதாரணம், மோடி கடலுக்கு அடியில் சென்று துவாரகையை பார்த்து வந்தது. இதுபோன்ற பல புதுபுது விஷயங்களை பார்க்க வேண்டும் என்று விருப்பம் கொள்பவர் மோடி.

அந்தவகையில் இஸ்ரோ, விண்வெளி துறையில் பல முயற்சிகளை செய்து வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் 9000 கோடி மதிப்பிலான ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சோதனைகளையும் முயற்சிகளையும் செய்து வருகிறது, இஸ்ரோ.

2025 ஆம் ஆண்டு நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ.  இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றும் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார் .

மேலும் பேசிய அவர், பிரதமருக்கு பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும் விண்வெளி பயிற்சி திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும், இந்தியாவின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் எங்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ… பாவம் அதுக்கு என்ன கஷ்டமோ!
Modi

இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கையுடனும், அன்பாகவும் மோடிக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடவே பிரதமரும் விருப்பம் கொள்வார் என்பதனால், விண்வெளிக்கு போக ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் நேரம் காலம் பாதுகாப்பு ஆகியவை இருக்கிறதல்லவா? அதுவும் இந்தியாவின் மூன்றாவது குடிமகன் என்ற பட்சத்தில், அவர் விண்வெளி செல்வதற்கான நேரத்தை கணிப்பது கடினம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com