தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி வருகிறாரா?

முத்துராமலிங்க தேவர்-மோடி
முத்துராமலிங்க தேவர்-மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலுள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இம்மாதம் 30-ம் தேதி குருபூஜை நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில்  தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து தெரிவித்ததாவது;

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்கு தமிழக பாஜகவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இதுவரையில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. தேவர் குருபூஜை விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்து பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பே இறுதியானது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் தேவர் குருபூஜையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.  அத்துடன் சுற்றுவட்டார பகுதி மக்களும் வருகை புரிந்து அஞ்சலி செலுத்துவர் என்பதால், சாதி ரீதியான கலவரம் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவுவும்  போடப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கின்ற பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி பயணமாகிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவருடைய நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அத்துடன் அன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னதாக தமிழக பாஜகவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பாக இதுவரையில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக உலா வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

கட்சியில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பே இறுதியானது என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com