நீங்கள் அனுப்பும் பணம் சரியான நபருக்குத் தான் செல்கிறதா? அறிந்து கொள்ள புதிய வசதி..!!

Valid upi handle
UPI handle
Published on

தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டு வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் யுபிஐ முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் போது, நாம் அனுப்பும் பணம் சரியான நிறுவனத்திற்குத் தான் செல்கிறதா என்பதை அறிந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI). இதன்மூலம் உங்கள் பணம் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளை ஆன்லைனில் எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்கு யுபிஐ எனும் ஆன்லைன் பரிவர்த்தனை உதவுகிறது. முதலீட்டு ஆலோசகர்கள், பங்கு தரகர்கள் மற்றும் ரிசர்ச் அனலிஸ்ட்கள் போன்ற பதிவு செயய்ப்பட்ட நிறுவனங்களுக்கு என தனியாக ‘யுபிஐ ஹேண்டில்’ வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் உங்கள் பணம் பாதுகாப்பாக சென்றடைந்ததை உறுதி செய்து கொள்ள முடியும்

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வசதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு பணம் அனுப்பும் போது, அந்தப் பணம் மோசடிகாரர்களைச் சென்றடையாமல் பாதுகாக்கவும், சரியான நிறுவனத்திற்கு பணம் சென்றதா என்பதை அறிந்து கொள்ளவும் யுபிஐ ஹேண்டில் வசதி உதவும்.

இந்த வசதியில் ‘@valid’ என்ற தனித்துவமான வார்த்தை அடங்கியிருக்கும். இந்த ஹேண்டில்களை, இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் (National Payments Corporation of India, NPCI) ஒத்துழைப்புடன் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் செபி வழங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சேவை வழங்கும் பிரிவினருக்கும், நிறுவனத்தின் பெயருக்குப் பின் தனித்துவமான ஒரு பிற்சேர்க்கை குறியீடு (@valid) வழங்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக XYZ எனும் பதிவு செய்யப்பட்ட ஷேர் புரோக்கர் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு ஆக்சிஸ் வங்கியில் இருந்தால் அதன் யுபிஐ ஹேண்டில் ‘xyz.brk@validaxis’ ஆக இருக்கும்.

ABC எனும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எச்டிஎஃப்சி வங்கியில் இருந்தால் அதன் யுபிஐ ஹேண்டில் ‘abc.mf@validhdfc’ ஆக இருக்கும்.

நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஹேண்டில் ஐடியை அடையாளம் கண்டு, நீங்கள் அனுப்பும் பணம் சரியான நிறுவனத்திற்குத் தான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கடன் கொடுத்துவிட்டு மிரட்டும் ஆன்லைன் செயலிகள்: வேண்டாம் இந்த விபரீதம்!
Valid upi handle

பதிவு செய்யப்பட்ட பங்குச்சந்தை நிறுவனத்தின் யுபிஐ ஐடி மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை செபி செக் பிளாட்பார்ம் https://siportal.sebi.gov.in/intermediary/sebi-check எனும் இணையதளத்தின் மூலம் முதலீட்டாளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தும் போது, பணத்தைப் பாதுகாக்கும் பச்சை நிறக் குறியீடுகள் மற்றும் முக்கோணத்திற்குள் 'தம்ஸ் அப்' குறியீட்டையும் பார்க்கலாம். மேலும் 'கியுஆர் கோடு' நடுவில் பச்சை நிற முக்கோணத்திற்குள் 'தம்ஸ் அப்' குறியீடு இருக்கும். இதனைக் கொண்டும் பணம் பாதுகாப்பாக சென்றதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
முதல்முறையாக டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை: உயர் நீதிமன்றம் அதிரடி..!
Valid upi handle

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com