லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் பலி!

Isreal attack on Lebanon
Isreal attack on Lebanon
Published on

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் பல காலங்களாக நடைபெற்று  வருகிறது. ஹமாஸ் அமைப்பினை முழுவதுமாக ஒழிக்கும் வரை இஸ்ரேல் இந்தப் போரை நிறுத்த முடியாது என்று கூறிவிட்டது. ஹமாஸ் அமைப்பினருக்கும் பாலஸ்தீனத்திற்கும் உதவியாக இருந்து வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்த்து தற்போது இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 17ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பின் 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பெரிய தாக்குதலை நாங்கள் கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை செய்தது.

இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் லெபனான் மீது இஸ்ரேல் புதிதாக ஒரு தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்ததாகவும், இதில் குழந்தைகளும் அடங்கும் என்ற தகவலும் வந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு, இப்போது நடந்த இந்த தாக்குதலே மிகவும் கொடூரமான தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
“கிடைத்த இடத்தில் தூங்கினேன், உணவருந்தினேன்” – பிரதமர் மோடி உருக்கம்!
Isreal attack on Lebanon

இஸ்ரேல் தெற்கு கிழக்கு லெபனானில் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் குடும்பம் குடும்பமாக பெய்ரூட் நோக்கி செல்கின்றனர்.

இதனையடுத்து இலங்கை தூதரகம் லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com