இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பால் அதிரும் மத்திய கிழக்கு.!

Iran - Israel
Iran - Israel
Updated on

மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக உலக அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதற்குப் பிறகு, அதனைத் திறக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. ஈரான் விதிக்கும் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஹார்மூஸ் நீரிணையைத் திறப்பது சாத்தியம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறாமல் இருக்கிறது.

அமெரிக்கா தங்கள் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்க தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையான போரும், அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. 2 வார காலம் நிர்ணயிக்கப்பட்ட இந்த தற்காலிக போர் நிறுத்தம், மேலும் நீடிக்கும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும், அமெரிக்காவின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் போர் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் ஹார்மூஸ் நீரிணையை காரணம் காட்டி, இஸ்ரேலை கட்டுப்படுத்தியுள்ளது அமெரிக்கா. ஒருவேளை போர் மீண்டும் தொடர்ந்தால், ஹார்மூஸ் நீரிணைத் திறப்பு மேலும் கால தாமதமாக வாய்ப்புள்ளது.

போர் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுகையில், “ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்க தயாராக இருக்கிறோம். இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமெனி குடும்பத்தை முழுமையாக அழிக்க அமெரிக்காவின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
Iran - Israel

ஹார்மூஸ் நீரிணையில் ஈரானுக்கு செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடல் வழி முற்றுகையை அமெரிக்கா நிறுத்தினால் மட்டுமே, பேச்சு வார்த்தையை மேற்கொள்ள ஈரான் சம்மதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலக நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், பல நாடுகளில் கடுமையான விலைவாசி உயரும் அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே உஷார்.! உங்கள் குழந்தையின் உணவு பாதுகாப்பானதா? இனி லேபிளை சரிபாருங்கள்..!
Iran - Israel

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com