ஈரான் நாட்டின் எண்ணெய் கிணறுகளை தாக்க இஸ்ரேல் திட்டம்!

Isreal Iran war
Isreal Iran war
Published on

ஈரான் இஸ்ரேல் போர் மிகவும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் ஈரானில் உள்ள எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இஸ்ரேல் காசா போர் தொடங்கி ஒரு வருடக் காலம் ஆகிவிட்டது. ஆனால் போர் முடிந்தப்பாடு இல்லை. மேம்மேலும் வலுவடைந்துக் கொண்டேதான் வருகின்றது. ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை குறிவைத்துதான் தற்போது இஸ்ரேல் லெபனான் மீதும் ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருக்கும் ஏராளமான மக்கள் தற்போது புலம்பெயர்ந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உட்பட முக்கிய நபர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து போர் தீவிரமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேலின் தரைப்படை வீரர்கள் தரை வழியாகவும் தாக்குதல் நடத்துகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐநா படையினரை தாக்கியது. இதில் இருவர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக தற்போது ஈரானில் உள்ள எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் விலை உலகளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்று உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சவுதி அரேபியா, அரபு அமீரகம், கத்தார் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் இஸ்ரேல் ஈரானை தாக்குவதற்கு அவர்களின் வான் பரப்பை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கமலா ஹாரிஸூக்கு ஆதரவாக களமிறங்கும் ஏ. ஆர். ரஹ்மான்!
Isreal Iran war

இதையும் மீறி உதவினால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு உதவினால், தங்கள் நாடுகளின் எண்ணெய் கிணறுகளை ஈரான் தாக்கக்கூடும் என்பதால் இந்த சண்டையில் தங்களை இழுக்க வேண்டாம் என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.   

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com