இஸ்ரேல் மக்கள் மாலத்தீவிற்குள் நுழையத்தடை… வெளிப்படை எதிர்ப்பு தெரிவித்த முதல்நாடு!

Mohammed Muizzu
Mohammed Muizzu
Published on

இஸ்ரேல் நாட்டு மக்கள் மாலத்தீவிற்குள் வரக்கூடாது என்றும், ஏற்கனவே அங்கிருந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்றும் மாலத்தீவு முடிவு செய்துள்ளது. ஆகையால், இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு முதன்முறையாக வெளிப்படை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது மாலத்தீவு.

8 மாதங்களாகியும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் முடிந்தப்பாடு இல்லை. எவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் இஸ்ரேல், போரை நிறுத்தவே மாட்டேன் என்கிறது. ஒருபக்கம் இஸ்ரேல் இன்னும் 7 மாதங்கள் போரை நடத்துவோம் என்று கூறியது. மறுபக்கம், போரை நிறுத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் எதுவும் கூறவில்லை.

சமீபத்தில் இஸ்ரேல் ரஃபா மீது நடத்திய தாக்குதல், உலகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. உலக நாட்டு மக்கள் இதனை கடுமையாக எதிர்த்து பதிவிட்டினர். அந்தவகையில் தற்போது மாலத்தீவில் வெளிப்படை எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு பதவியேற்ற காலம் முதல், இந்தியாவுக்கு எதிராக பல முடிவுகளை எடுத்தார். அதேபோல் சீனாவுக்கு ஆதரவாகவும் சில முடிவுகளை எடுத்தார். அந்தவகையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த முடிவுகளை உலக நாடுகள் சில ஆதரித்தாலும், சில நாடுகள் இஸ்ரேல் செய்யும் காரியங்களுக்கு இஸ்ரேல் மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

நேற்று மாலை மாலத்தீவு அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில், அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த, நேற்றைய தினம் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு முடிவு செய்தது. இது தொடர்பான தகவல் வெளியான உடனேயே தற்போது மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "மாலத்தீவு கொண்டு வர உள்ள சட்டத் திருத்தங்களால் தற்போது அங்குள்ள இஸ்ரேல் மக்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம். இதனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவது எங்களுக்குக் கடினமாக இருக்கும். எனவே இப்போதே மாலத்தீவில் உள்ள இஸ்ரேல் நாட்டவர் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகில் பெண்கள் மட்டுமே வாழும் ஒரே கிராமம் ‘உமோஜா’! அதன் பின்னால் இருக்கும் சோகக் கதை!
Mohammed Muizzu

இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு நாட்டில் இரண்டாவது பாஸ்போர்ட்டை வைத்திருந்தாலும் கூட மாலத்தீவுக்கு வருவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் இஸ்ரேல்மீது முதல் வெளிப்படை எதிர்ப்பை தெரிவித்த நாடாக மாலத்தீவு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com