இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பிய நாட்டு மக்கள்!

Nethanyagu
NethanyaguImge Credit: Getty Images
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

இஸ்ரேல் காசா போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நாம் அறிந்ததே. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சொந்த நாட்டு மக்களே திரும்பியுள்ளனர். இது இஸ்ரேல் அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

8 மாதங்களாக காசா இஸ்ரேல் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரினை கைவிட மறுக்கும் இஸ்ரேலுக்கு எதிராக, பல உலக நாடுகள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றன.

அதேபோல் சில நாட்டு மக்கள் தைரியமாக இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக ஒன்று திரண்டு கோஷம் எழுப்பி வருகின்றனர். இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவின் பல்கலைகழக மாணவர்கள்கூட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலர் கைது செய்யப்பட்டனர்.

மாலத்தீவு, உடனே இஸ்ரேல் நாட்டு மக்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி கூறியது. இப்படி உலக நாடுகள் பல வழிகளில் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறிவிட்டது.

இப்படி பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக இருந்தாலும், சொந்த நாட்டு மக்கள் எந்த குரலும் எழுப்பாததால், இஸ்ரேல் தைரியமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது இஸ்ரேல் குடிமக்களும் ஒட்டுமொத்தமாக பொங்கி எழுந்துள்ளனர். இதுவரை வாய்த்திறக்காமல் இருந்ததற்கும் சேர்த்து தற்போது எதிர்ப்பு குரலை முன்வைக்கிறார்கள்.

ஹமாஸ் அமைப்பிடம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் போட்டு அங்குள்ள பணயக்கைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். நேற்று ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட அந்நாட்டு மக்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது நெதன்யாகுவை ராஜினாமா செய்ய கூறியும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இந்த பாலைக் குடித்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமாமே?
Nethanyagu

ஏற்கனவே நெதன்யாகுவிற்கு பல வழிகளில் அச்சுறுத்தல் இருந்து வந்தது. அவருடைய பதிவியை உடனே ராஜினாமா செய்யும்படி பல அமைப்புகள் கூறி வந்தன. இதனையடுத்து தற்போது இஸ்ரேல் மக்களும் கூறியது அவர் பதவிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. அந்தளவுக்கு கொடூரமாக செயல்பட்டு வரும் இஸ்ரேல், தங்கள் நாட்டு மக்களின் பேச்சையாவது கேட்குமா என்பதுதான் உலக மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com