இந்த பாலைக் குடித்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமாமே?

Milks
Best Milks to Lower Cholesterol Levels

ஒருவர் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க கொலஸ்ட்ரால் அளவை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அதிக கொழுப்பு இதய நோய் மற்றும் பிற உடல்நலப பிரச்சினைகளை உண்டாக்கும். நமது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறை உதவினாலும், அதில் சில பால் வகைகளை சேர்த்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். அந்த வகையில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில சிறந்த பால் வகைகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

பாதாம் பால்: பாதாம் பால் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை மற்றும் இதயத்துக்கு ஆரோக்கியமான மோனோ சாச்சுரோடட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதை உணவில் ஒரு பகுதியாக உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும். 

சோயா பால்: கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு சோயா பால் ஒரு சிறந்த உணவாகும். இது சோயா பீனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகவே இதில் கொலஸ்ட்ரால் துளி கூட இல்லை. சோயா பால் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 

ஓட் பால்: ஓட் பால், ஊற வைத்த ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஓட்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளதால், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஓட் பால் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஓட்ஸ் பாலை வழக்கமாக உட்கொள்வதால் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

ஆளிவிதை பால்: ஆளி விதை பால் என்பது ஆளி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை பால் ஆகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆளி விதை பாலில் உள்ள லிக்னான்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி கூடுதல் நன்மைகளை வழங்கும். 

இதையும் படியுங்கள்:
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளன தெரியுமா?
Milks

கொழுப்பு நீக்கப்பட்ட பால்: நீங்கள் பசுவின் பாலை விரும்பும் நபராக இருந்தால் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். சராசரி பாலுடன் ஒப்பிடும்போது இதில் உள்ள குறைந்த கொழுப்பு, உடலுக்கு எவ்விதமான தீங்குகளையும் ஏற்படுத்தாது. மேலும் இதில் புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், ஒரு ஆரோக்கியமான பாலாக பார்க்கப்படுகிறது. 

இத்தகைய பால் வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும். உங்களது குறிப்பிட்ட உணவுத் தேவைகள் மற்றும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில், தகுந்த சுகாதார நிபுணரை அணுகி இது சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு, ஆரோக்கியமாக இருக்க முற்படுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com