இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி நீக்கம்… நெதன்யாகு அதிரடி!

Netanyahu
Netanyahu
Published on

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ்  கேலன்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா இடையே நடைபெற்று வரும் போர், லெபனான், ஈரான் என விரிவடைந்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை எதிர்த்து இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பஞ்சம், பசி, நோய் போன்றவை தலைவிரித்தாடுகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ளது.

இதனை எதிர்த்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், ஈரான் மற்றும் லெபனான் வரை போர் விரிவடைந்தது. லெபனான் மற்றும் காசா ஆகியவை சிறிய நாடு என்பதால், இஸ்ரேலை எதிர்ப்பதில் கஷ்டம் இருந்தது. ஆனால், ஈரான் பெரிய நாடு என்பதாலும், இஸ்ரேலை விட அதிக போர் ஆயுதங்களை வைத்திருப்பதாலும், இந்த இரண்டு நாடுகளும் போரிடுவது மிகப்பெரிய போராகவே அமைந்துள்ளது.

இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் முடிவடைந்துள்ளது. அந்தவகையில் தேர்தலில் வெற்றிபெற்று டொனால்ட் ட்ரம்ப் புதிய அதிபரானார். இவர் பொறுப்பிற்கு வந்ததும்தான் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அதே ஆதரவை அளிக்குமா என்பது தெரியும்.

இப்படியான நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

கேலன்டிற்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிடியோன் சார் என்பவர் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் வாங்க! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!
Netanyahu

இதுகுறித்து பிரதமர் பேசுகையில், “கடந்த சில மாதங்களாக நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆகையால், தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்.” என்றார்.

இந்தப் போர் ஆரம்பமானதிலிருந்து பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவை இந்தப் போரில் இஸ்ரேலுக்கு பின்னடவை சில நேரம் கொடுத்துள்ளதாக நெதன்யாகு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com