கனடாவில் வாழும் இந்தியர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

Indians in Canada
Indians in Canada

கனடாவில் வாழும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் பல புதிய  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது அவர்களைத் தடுமாறச் செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வோர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமானோர் கனடாவை நோக்கிச் செல்கின்றனர். படிப்பதற்கு, வேலைக்கு என அனைத்திற்குமே அவர்கள் கனடா செல்கின்றனர். இதனால், வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை , பல மடங்காகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தனை நாட்களாகக் கனடாவின் வெளியுறவுக் கொள்கைகள், வெளிநாட்டு மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இருந்தன. இதனால் சில ஆண்டுகளாக அங்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

அதுவும் 2013ம் ஆண்டு முதல் கடந்த 2023ம் ஆண்டு வரை சராசரியாக 32, 800 பேரிலிருந்து 1, 39,000 வரை அதிகரித்துள்ளது. அதேபோல கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 62,223ஆக இருந்த நிலையில், 2021இல் அது 4,00,521ஆக உயர்ந்துள்ளது.

இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமானதால், கனடாவின் பொருளாதாரம் மேம்படுகிறது என்றாலும், கனடா மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதன்படி கனடாவின் மிகச்சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வர்ட் தீவு வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான பெர்மிட்களை 25% குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது வெறும் தொடக்கம் தான். வரும் காலத்தில் மேலும் பல மாகாணங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
6ம் கட்ட வாக்குப்பதிவு… பிரதமரின் X தள பதிவு!
Indians in Canada

இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம், இந்தியர்களின் அதிக அளவிலான வருகை, அங்குள்ள வீடுகளின் விலையை அதிகரித்துள்ளது. அதேபோல் வாடகையும் அதிக அளவில் இருக்கிறது. மேலும் அரசு ஹெல்த் கேரிலும் கனடா மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வரி வசூலிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்த மக்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இப்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், இனி விதிக்கப்போகும் கட்டுப்பாடுகளும் புதிதாக அங்கு வருபவர்களுக்கு மட்டுமல்ல, பல ஆண்டுக் காலம் அங்கு வசித்து வருபவர்களுக்கும் பொறுந்தும் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com