இளம் தலைமுறையினரை ஆதரிக்கும் விதமாக இஸ்ரோ பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியையும் அறிவித்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இஸ்ரோ, விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
பல சாதனைகளை படைத்த இஸ்ரோ, தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை போன்ற விண்வெளி பயன்பாடுகளை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
பொதுவாக பல சின்ன குழந்தைகளின் Ambition என்ன என்று கேட்டால், அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானி என்றுதான் கூறுவார்கள். குறிப்பாக விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளின் மனதில் பதிந்த ஒன்று இஸ்ரோ.
அந்தவகையில் இஸ்ரோ, பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், தொழில்நுப்டம் ஆகியவற்றை குறித்து அறிமுகம் செய்து விண்வெளி ஆய்வு குறித்து ஊக்குவிக்கும் வகையில் ஒரு முயற்சி மேற்கொண்டது. கடந்த 2019ம் ஆண்டு முதல் யுவிகா (YUVIKA) என்ற இளம் விஞ்ஞானி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் விண்வெளி ஆய்வில் அறிவியல், தொழில்நுப்டம், ஆகியவற்றை பற்றி பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக எடுத்துரைகப்படும். மேலும் இந்தியாவின் முன்னணி நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை இதன்மூலம் பள்ளி மாணவர்கள் பெறுவார்கள்.
இந்த வாய்ப்புக்கு நாடு முழுவதும் பள்ளி பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் மாநிலத்திலிருந்து தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 23.3.2025 ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 7.4.2025 அன்று அறிவிக்கப்படுவார்கள்.
இதன் பயிற்சி வகுப்பு 19.05.2025 முதல் 30.05.2025 வரை ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களில் இருந்து தற்காலிக பட்டியல் வெளியிட்ட பின்னர், தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு, ஏப்ரல் மாதம் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று திடமாகவும் ஆர்வமாகவும் இருக்கும் பள்ளி மாணவர்களே… உடனே விண்ணப்பம் செய்யுங்களேன்…