இஸ்ரோவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

ISRO
ISRO
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் (GSLV F-15) மூலம் என்.வி.எஸ். - 02 (NVS - 2) வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் நடந்த முதல் ராக்கெட் ஏவுதல் இதுவாகும்.

இதையும் படியுங்கள்:
இவர்தான் பிரபல நடிகர் எஸ்.ஏ.அசோகன் மகனா? இது தெரியாம போச்சே!
ISRO

இந்த மையத்திதிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டால், அவை வினாடிக்கு 0.4 கி.மீ கூடுதல் வேகத்துடன் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 1440 கி.மீ கூடுதல் வேகத்தை ராக்கெட்டிற்கு அளிக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் பூமியின் சுழற்சி அமைந்துள்ளது.

இந்த விண்வெளி ஆய்வு மையம் போல் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம் பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன.

இந்த செயற்கை கோள் இந்தியாவின் தரை, கடல்  மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பயந்தது என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அதோடு விண்வெளி வழிசெலுத்தலில் இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உணவுடன் சேர்த்து சாப்பிடும் சாஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?
ISRO

இதுகுறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ஏவுகணை என்ற மைல்கல்லை எட்டியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் வரலாற்றுத் தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது ஒரு பாக்கியம். இஸ்ரோ குழுவின் சார்பாக வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் மற்றும் சிலரின் எளிமையான தொடக்கத்திலிருந்து, இது ஒரு அற்புதமான பயணம்” என்று குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com